சையத் முஷ்டாக் அலி: பரபரப்பான ஆட்டத்தில் விதர்பாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது கர்நாடகா!

Updated: Sat, Nov 20 2021 16:47 IST
SMAT 2021 Semi Final: Karnataka beat Vidarbha by 4 runs and reach SMAT final for the 3rd Time (Image Source: Google)

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் விதர்பா - கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய கர்நாடகா அணி ரோஹன் கதம் - மனீஷ் பாண்டே ஆகியோரது அதிரடியான அரைசதத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களைச் சேர்த்தது. 

இதில் ரோஹன் கதம் 87 ரன்களையும், மனீஷ் பாண்டே 54 ரன்களையும் சேர்த்தனர். விதர்பா அணி தரப்பில் தர்ஷன் நல்கண்டே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து கடின இலக்கைத் துரத்திய விதர்பா அணி வீரர்கள் சீரன இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினார். இருப்பினும் கடைசி ஓவரில் அந்த அணி வெற்றிபெற 14 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

கர்நாடக அணி தரப்பில் கடைசி ஓவரை வீசிய வித்யாதர் பட்டில் 9 ரன்களை மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பாற்றினார். இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகா அணி விதர்பாவை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. 

Also Read: T20 World Cup 2021

இந்த வெற்றியின் மூலம் சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு கர்நாடக அணி  மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை