SMAT 2024: ராஜத் பட்டிதார் அதிரடியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது மத்திய பிரதேசம்!

Updated: Fri, Dec 13 2024 22:27 IST
Image Source: Google

சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிகெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு பிரியன்ஷ் ஆர்யா - யாஷ் துல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யாஷ் துல் 11 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 29 ரன்கள் எடுத்த கையோடு பிரியன்ஷ் ஆர்யாவும் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஆயூஷ் பதோனி 19 ரன்களையும், ஹிமாத் சிங் 15 ரன்களையும் சேர்த்த நிலையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் இணைந்த அனுஜ் ராவத் மற்றும் மயங்க் ராவத் இணை பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் 24 ரன்களில் மயங்க் ராவத் விக்கெட்டை இழக்க, இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அனுஜ் ராவத் 33 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே சேர்த்தது. மத்திய பிரதேச அணி தரப்பில் வெங்கடேஷ் ஐயர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய மத்திய பிரதேச அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அர்பித் கௌத் ரன்கள் ஏதுமின்றியும், ஷுப்ரன்ஷு செனாபதி ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஹர்ஷ் கௌலி - ஹர்ப்ரீத் சிங் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். 

இதில் ஹர்ஷ் கௌலி 30 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ராஜத் பட்டிதார் அதிராடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தினர். தொடர்ந்து அபார அட்டத்தை வெளிப்படுத்திய ராஜத் பட்டிதார் இப்போட்டியில் தனது அரைசதத்தியும் பதிவுசெய்து அசத்தினர். இதனால் மத்திய பிரதேச அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியது.

Also Read: Funding To Save Test Cricket

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராஜத் பட்டிதார் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 66 ரன்களையும், ஹர்ப்ரீத் சிங் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 46 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தன்ர். இதன்மூலம் மத்திய பிரதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதையடுத்து நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை அணியை எதிர்த்து மத்திய பிரதேச அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை