ஆஃப்கான், அயர்லாந்து தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!

Updated: Tue, Sep 10 2024 10:15 IST
Image Source: Google

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வந்த தென் ஆப்பிரிக்க அணியானது அடுத்ததாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அந்தவகையில் தென் ஆப்பிரிக்க - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. 

அதனைத்தொடர்ந்து அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. இதில் டி20 தொடரானது செப் 27ஆம் தேதியும், ஒருநாள் தொடரானது அக்டோபர் 2ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது. மேலும் அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இந்த கிரிக்கெட் தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இத்தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க ஒருநாள் மற்றும் டி20 அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்தவகையில் ஒருநாள் அணியின் கேப்டனாக டெம்பா பவுமாவும், டி20 அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரமும் தொடர்கின்றனர். மேலும் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் அறிமுக ஆல் ரவுண்டர் ஆண்டிலே சிமெலேனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஆல்ரவுண்டர் ஜேசன் ஸ்மித் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் நகாபா பீட்டர் ஆகியோருக்கு ஒருநாள் அணியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி தனது காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ள நிலையில், தென் ஆபிரிக்காவின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலும் இடம்பிடித்து அசத்தியுள்ளார். 

அதேசமயம், ககிசோ ரபாடா, கேசவ் மகராஜ், அன்ரிச் நோர்ட்ஜே, மார்கோ ஜான்சன், தப்ரைஸ் ஷம்சி, டேவிட் மில்லர் மற்றும் ஹென்ரிச் கிளாசென் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு இந்த தொடர்களில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் விளையாடிய குயின்டன் டி காக், அயர்லாந்து டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தென்ஆப்பிரிக்கா ஒருநாள் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், நந்த்ரே பர்கர், டோனி டி ஸோர்சி, ஜார்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, அண்டில் பெஹ்லுக்வாயோ, நகாபா பீட்டர், அண்டில் சிமெலேன், ஜேசன் ஸ்மித், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன் மற்றும் லிசாத் வில்லியம்ஸ்.

அயர்லாந்துக்கு எதிரான தென் ஆப்பிரிக்கா டி20 அணி: ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஆட்னீல் பார்ட்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நந்த்ரே பர்கர், ஜார்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், பேட்ரிக் க்ரூகர், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, நகாபா பீட்டர், ரியான் ரிக்கெல்டன், அண்டில் சிமெலேன், ஜேசன் ஸ்மித், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் லிசாத் வில்லியம்ஸ்.

Also Read: Funding To Save Test Cricket

அயர்லாந்துக்கு எதிரான தென் ஆப்பிரிக்கா ஒருநாள் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், நந்த்ரே பர்கர், டோனி டி ஸோர்சி, பிஜோர்ன் ஃபோர்டுயின், வியான் முல்டர்,லுங்கி இங்கிடி, அண்டில் பெஹ்லுக்வாயோ, நகாபா பீட்டர், ரியான் ரிக்கல்டன், ஜேசன் ஸ்மித், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், கைல் வெர்ரைன், மற்றும் லிசாத் வில்லியம்ஸ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை