சௌரவ் கங்குலி தலைமையில் களமிறங்கிய இந்தியா மகாராஜாஸ்!

Updated: Fri, Aug 12 2022 17:38 IST
Sourav Ganguly to lead India vs Rest of World XI in special opener of Legends League Cricket on Sept (Image Source: Google)

ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இந்த கிரிக்கெட் தொடரின் ஆணையர்  ரவி சாஸ்திரி.

இம்முறை லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் 4 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன. மொத்தம் 15 போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, சௌரவ் கங்குலி தலைமையிலான இந்தியா மகாராஜாஸ் மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான உலக ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதும் சிறப்பு போட்டி ஒன்று நடத்தப்படுகிறது. 

செப்டம்பர் 16ஆம் தேதி இந்த போட்டி நடத்தப்படுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டனில் இந்த போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியில், அவரது கேப்டன்சியில் அவரால் உருவாக்கப்பட்டு, பிற்காலத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய வீரேந்திர சேவாக்,  முகமது கைஃப், ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் ஆகிய மிகச்சிறந்த வீரர்கள் ஆடுகின்றனர்.

யூசுஃப் பதான், பத்ரிநாத், பார்த்திவ் படேல், ஸ்டூவர்ட் பின்னி, அஜய் ஜடேஜா, ஆர்பி சிங், ஓஜா ஆகிய வீரர்களும் விளையாடுகின்றனர். சூதாட்ட புகாரில் தடையை அனுபவித்து முடித்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்தும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார்.
 
செப்டம்பர் 16ஆம் தேதி நடக்கும் இந்த போட்டியில் மோதும் இந்தியா மகாராஜாஸ் மற்றும் உலக ஜெயிண்ட்ஸ் அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களை பார்ப்போம்.

இந்தியா மகாராஜாஸ் அணி: சௌரவ் கங்குலி (கேப்டன்), வீரேந்திர சேவாக், முகமது கைஃப், யூசுஃப் பதான், பத்ரிநாத், இர்ஃபான் பதான், பார்த்திவ் படேல், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா, பிரக்யான் ஓஜா, அசோக் டிண்டா, அஜய் ஜடேஜா, ஆர்பி சிங், ஜொஹிந்தர் சர்மா, ரிதீந்தர் சிங் சோதி.

உலக ஜெயிண்ட்ஸ் அணி: லெண்டல் சிம்மன்ஸ், ஹெர்ஷல் கிப்ஸ், ஜாக் காலிஸ், சனத் ஜெயசூரியா, மேட் பிரயர், நேதன் மெக்கல்லம், ஜாண்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெய்ன், ஹாமில்டன் மசகட்சா, மோர்டசா, அஸ்கர் ஆஃப்கான், மிட்செல் ஜான்சன், பிரெட் லீல், கெவின் ஓ பிரயன், தினேஷ் ராம்டின்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை