NZ vs SA: 7 ஆண்டுகளுக்கு பிறகு அணியில் இடம்பிடித்த ஹார்மர்!

Updated: Wed, Jan 26 2022 15:26 IST
South Africa Announce Test Squad For New Zealand Tour, This Player Returns After 7 Years
Image Source: Google

தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் இந்தியாவுடான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை 2-1, 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இந்நிலையில் அடுத்த மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 

இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சுழற்பந்து விச்சாளார் சைமன் ஹார்மர் 7ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். 

முன்னதாக இவர் கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான நாக்பூர் டெஸ்ட் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்திய டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற ஜார்ஜ் லிண்டேவுக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மாற்றாக லுதோ சிபம்லா அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தென் ஆப்பிரிக்க அணி: டீன் எல்கர் (கேப்டன்), டெம்பா பவுமா, சரேல் எர்வீ, சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, டுவைன் ஒலிவியர், கீகன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கெல்டன், லூத்தோ சிபம்லா, க்ளென்டன் ஸ்டூர்மேன், ராஸ்ஸி வான் டெர் டுசென், கைல் வெர்ரைன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை