உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!

Updated: Mon, Dec 09 2024 20:30 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்றது. இப்போடியில் தென் ஆப்பிரிக்க அணியானது அபாரமாக விளையாடி 109 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியானது கைப்பற்றியுள்ளது. 

மேலும் இத்தொட்ர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக நடைபெற்றதன் காரணமான, இப்போட்டிக்கு பிறகு புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கை அணிக்கு எதிராக அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணியானது 63.33 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி 59.29 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 

அதேசமயம் நேற்றைய தினம் 60.71 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியானது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 57.29 புள்ளிகளுடன் இந்திய அணி மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது. மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தோல்வியைத் தழுவிய இலங்கை அணியானது புள்ளிகளை இழந்த சமயத்திலும், 45.45 புள்ளிகளுடன் தொடர்ந்து நான்காம் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 

 

இதுதவிர்த்து நியூசிலாந்து அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டிலில் 45.24 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், இப்போட்டியில் அடைந்த தோல்வியின் காரணமாக நியூசிலாந்து அணியானது 44.23 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள்து. முன்னதாக நியூசிலாந்து அணி 5ஆம் இடத்திலும், இங்கிலாந்து அணி 6ஆம் இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 மேலும் பாகிஸ்தான் அணியானது 33.33 புள்ளிகளைப் பெற்று தற்போது 7ஆம் இடத்தில் உள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் வங்கதேச அணியானது 31.25 புள்ளிகளைப் பெற்று 8ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் வங்கதேசத்திற்கு எதிராக தோல்வியைத் தழுவிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 24.24 புள்ளிகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

 

Also Read: Funding To Save Test Cricket

தற்போது இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் அதில், தென் ஆப்பிரிக்க அணி தங்களது இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை ஏறத்தாழ  உறுதிசெய்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த அடுத்ததாக நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏதெனும் ஒரு போட்டியில் வெற்றிபெற்றாலும் இறுதிப்போட்டிக்குள் நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை