SA vs IND: தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து மேலும் ஒரு வீரர் விலகல்!

Updated: Sat, Dec 30 2023 12:24 IST
SA vs IND: தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து மேலும் ஒரு வீரர் விலகல்! (Image Source: Google)

இந்திய அணியானது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றில் விளையாடியது. இதில் 1-1 என்று டெஸ்ட் தொடர் சமன் செய்யப்பட்ட நிலையில், 2-1 என்று ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி விளையாடியது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ் 245 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்தது. இதில், 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே இந்தியா 131 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதுவரையில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றாத நிலையில், ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியை இழந்த நிலையில், 2ஆவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை டிரா செய்ய கடுமையாக முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி காயம் காரணமாக விலகியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த அவர் மருத்துவ சிகிச்சை காரணமாக இப்போட்டியிலிருந்து விலகுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தசைபிடிப்பு காரணமாக பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் செய்யாமல் இருந்தார். இதையடுத்து அவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியதை அடுத்து டீன் எல்கர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு மாற்றாக ஜூபைர் ஹம்சா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜெரால்ட் கோட்ஸியும் அணியிலிருந்து விலகியுள்ளது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

தென் ஆப்பிரிக்க அணி: டீன் எல்கர் (கே), டேவிட் பெடிங்ஹாம், நந்த்ரே பர்கர், டோனி டி ஸோர்ஸி, ஜுபைர் ஹம்சா, மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, கீகன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் கைல் வெர்ரைன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை