ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, முதல் அரையிறுதி - தென் ஆப்பிரிக்கா vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Jun 25 2024 22:22 IST
Image Source: Cricketnmore

South Africa vs Afghanistan Dream11 Prediction, T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன.

இதில் நாளை மறுநாள் நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காத தென் ஆப்பிரிக்க அணியும், முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடர் அரையிறுதிக்குள் நுழைந்துள்ள ஆஃப்கானிஸ்தான் அணியும் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

SA vs AFG: போட்டி தகவல்கள்

மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs ஆஃப்கானிஸ்தான்

இடம் - பிரையன் லாரா மைதானம், டிரினிடாட்

நேரம் - ஜூன் 27, காலை 6 மணி (இந்திய நேரப்படி)

SA vs AFG Pitch Report

டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தின் பவுண்டரிகள் எல்லைகள் சிறியது என்பதால் இது பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக கருதப்படுகிறது. அதேபோல் இந்த மைதானத்தில் சராசரி ஸ்கோரானது 160 முதல் 165 ஆக உள்ளது. அதுமட்டுமின்றி இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 267 ரன்கள் பதிவாகியுள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் வானவேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு இங்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு புதிய பந்தில் கூடுதல் பவுன்ஸ் இருக்கு என்பதால் அவர்களாலும் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இந்த மைதனத்தில் இதுவரை நடைபெற்றுள்ள 11 போட்டிகளில் 4 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 7 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றியைப் பெற்றுள்ளதால், டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

SA vs AFG T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் -02
  • தென் ஆப்பிரிக்கா - 02
  • ஆஃப்கானிஸ்தான் - 00

SA vs AFG: Where to Watch?

தென் ஆப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம்.

South Africa vs Afghanistan Probable Playing XI

தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.

ஆப்கானிஸ்தான் உத்தேச லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், அஸ்மத்துல்லா ஓமர்சாய், குல்பாதின் நைப், முகமது நபி, ரஷித் கான் (கேப்டன்), கரீம் ஜனத், நஞ்செலியா கரோத், நூர் அகமது, நவீன் உல் ஹக், ஃபாசல்ஹாக் ஃபரூக்கி.

SA vs AFG T20 World Cup Dream11 Team

விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக் (துணை கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், ரஹ்மானுல்லா குர்பாஸ்
பேட்ஸ்மேன் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
ஆல்ரவுண்டர் - குல்பதின் நைப்
பந்துவீச்சாளர்கள் - கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, ரஷித் கான் (கேப்டன்), நவீன் உல் ஹக், அன்ரிச் நோர்ட்ஜே.

SA vs AFG Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match SA vs AFG, SA vs AFG Dream11 Team, Fantasy Cricket Tips, SA vs AFG Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between South Africa vs Afghanistan

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை