SA vs ENG, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவரில் 298 ரன்களை குவித்தது. 299 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் சதமடித்தும் கூட (91 பந்தில் 113 ரன்கள்) அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பியதால் 271 ரன்கள் மட்டுமே அடித்து 27 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி ஜனவரி 29ஆம் தேதி நடக்கிறது. இந்த போட்டியிலும் ஜெயித்து ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணியும், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க 2ஆவது போட்டியில் ஜெயித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வெற்றி முனைப்பில் இங்கிலாந்து அணியும் களமிறங்குகின்றன. எனவே போட்டி கடுமையாக இருக்கும்.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs இங்கிலாந்து
- இடம் - மங்காங் ஓவல், ப்ளூம்ஃபோன்டைன்
- நேரம் - மதியம் 1.30 மணி
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 67
- தென் ஆப்பிரிக்கா - 32
- இங்கிலாந்து - 29
- டிரா - 01
- முடிவில்லை - 05
உத்தேச லெவன்
தென் ஆப்பிரிக்கா - டெம்பா பாவுமா (கே), குயின்டன் டி காக், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், சிசண்டா மாகலா, ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.
இங்கிலாந்து - ஜேசன் ராய், டேவிட் மாலன், பென் டக்கெட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கே), மொயின் அலி, சாம் கரண், டேவிட் வில்லி, அடில் ரஷித், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஒல்லி ஸ்டோன்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், குயின்டன் டி காக்
- பேட்டர்ஸ் - ரஸ்ஸி வான் டெர் டுசென், ஜேசன் ராய், டேவிட் மில்லர்
- ஆல்-ரவுண்டர்கள் - மொயீன் அலி, ஐடன் மார்க்ரம்
- பந்துவீச்சாளர்கள் - சிசண்டா மகலா, ஒல்லி ஸ்டோன், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே