SA vs IND, 3rd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதற்கு முன் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில், இந்தியா ஒரு போட்டியிலும், தென் ஆப்ரிக்கா ஒரு போட்டியிலும் வென்று 1-1 என்ற புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நாளை தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs இந்தியா
- இடம் - நியூலேண்ட்ஸ், கேப்டவுன்
- நேரம் - மதியம் 2 மணி (இந்திய நேரப்படி)
போட்டி முன்னோட்டம்
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இத்தொடரின் முதல் போட்டியில் அபாரமான வெற்றியைப் பெற்றிருந்தாலும், இரண்டாவது போட்டியில் கோட்டை விட்டது. இதற்கு காரணம் பேட்ஸ்மேன்கள் சரிவர ரன் குவிக்காததுதான்.
மேலும் காயம் காரணமாக விராட் கோலி இரண்டாவது போட்டியிலிருந்து விலகியதும் காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாளைய போட்டியில் விராட் கோலி விளையாடுவது உறுதியாகியுள்ளதால் இந்திய அணிக்கு கூடுதல் உத்வேகம் கிடைத்துள்ளது.
மேலும் கடந்த போட்டியில் விளையாடிய முகமது சிராஜ் காயமடைந்துள்ளதால், நாளைய போட்டியில் அவருக்கு பதில் உமேஷ் யாதவ் அல்லது இஷாந்த சர்மா ஆகியோரில் யார் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன.
அதேசமயம் சீனியர் வீரர்களுக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன. மேலும் இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் என்பதாலும் போட்டியின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
டீன் எல்கர் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டு வெற்றியைப் பெற்றுள்ளது. அணியின் பேட்டிங் வரிசையில் டீன் எல்கர், டெம்பா பவுமா ஆகியோருடன் வெண்டர் டுசென் இருப்பது பேட்டிங்கில் வலுசேர்க்கிறது.
பந்துவீச்சில் ரபாடா, இங்கிடி ஆகியோருடன் மார்கோ ஜான்சன், கேஷவ் மகாராஜ் இருப்பதும் இந்திய அணிக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள்-41
- தென் ஆப்பிரிக்க வெற்றி - 16
- இந்தியா வெற்றி - 11
- முடிவில்லை - 10
உத்தேச அணி
தென் ஆப்பிரிக்கா - டீன் எல்கர் (கே), ஐடன் மக்ரம், கீகன் பீட்டர்சன், ராஸ்ஸி வான் டெர் டுசென், டெம்பா பவுமா, கைல் வெர்ரைன், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, டுவைன் ஒலிவியர்.
இந்தியா - கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கே), அஜிங்கியா ரஹானே, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா/ உமேஷ் யாதவ்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - கைல் வெர்ரைன்
- பேட்டர்ஸ் - விராட் கோலி, கேஎல் ராகுல், டெம்பா பவுமா, டீன் எல்கர்
- ஆல்-ரவுண்டர்கள் - ரவிச்சந்திரன் அஸ்வின், மார்கோ ஜான்சன்
- பந்துவீச்சாளர்கள் - முகமது ஷமி, ககிசோ ரபாடா, டுவைன் ஒலிவியர், ஜஸ்பிரிட் பும்ரா.