டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்கா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Fri, Oct 29 2021 21:46 IST
Image Source: Google

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டி20 உலகக்கோப்பை தொடரின் ஏழாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

இதில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிகா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் -தென் ஆப்பிரிக்கா vs இலங்கை
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்
  • நேரம் - மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம் 

டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நடப்பு சீசனில் விளையாடிய 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியையும் சந்தித்துள்ளது. மேலும் கடந்த போட்டியில் டி காக் தனிப்பட்ட காரணங்களினால் விளையாடமல் இருந்தார்.

இந்நிலையில் நாளைய போட்டியில் அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஷம்சி, ரபாடா, பிரிட்டோரியஸ், நோர்ட்ஜே ஆகியோர் இருப்பதால் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறும் என்றே நிபுணர்கள் கணித்துள்ளனர். 

அதேசமயம் தசுன் ஷான்கா தலைமையிலான இலங்கை அணியும் விளையாடிய இரண்டு போட்டியில் ஒரு தோல்வி, ஒரு வெற்றியைச் சந்தித்துள்ளது. 

பேட்டிங்கில் சரித் அசலங்கா, பனுகா ராஜபக்ஷ ஆகியோர் சிறப்பாக விளையாடி வருவது அணிக்கு நம்பிக்கையளிக்கிறது. மேலும் பந்துவீச்சில் ஹசரங்கா, சமீரா, தீக்‌ஷனா ஆகியோரும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் எதிரணிக்கு சற்று சவாலளிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 16
  • தென் ஆப்பிரிக்கா வெற்றி - 11
  • இலங்கை வெற்றி - 5

உத்தேச அணி :

தென்ஆப்பிரிக்கா - டெம்பா பவுமா (கே), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென்/ குயின்டன் டி காக், டேவிட் மில்லர், டுவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.

இலங்கை - குசல் பெரேரா, பதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, அவிஷ்க ஃபெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக (கே), சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, லஹிரு குமார, மஹீஷ் தீக்ஷன.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக்
  • பேட்டர்ஸ் - சரித் அசலங்க, பானுக ராஜபக்ச, அவிஷ்க ஃபெர்னாண்டோ, ரஸ்ஸி வான் டெர்-டுசென்
  • ஆல்-ரவுண்டர்கள் - வனிந்து ஹசரங்க, ஐடன் மார்க்ரம்
  • பந்துவீச்சாளர்கள் - மஹீஷ் தீக்ஷனா, சமிக கருணாரத்ன, அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை