தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மீது கொலைவெறி தாக்குதல்!

Updated: Wed, Jun 01 2022 12:00 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க அணியின் இளம் கிரிக்கெட் வீரர் மாண்ட்லி குமாலே. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த அண்டர் 19 உலகக்கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

தொழில்முறை கிரிக்கெட் வீரராக தனது ஆரம்பக்கட்டத்தில் உள்ள மாண்ட்லி குமாலோ இங்கிலாந்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டரில் பப் ஓன்றின் வெளியே கடுமையாக தாக்கப்பட்டார். தனது அணியின் வெற்றியை கொண்டாட்டத்தின்போது, பிரிட்ஜ்வாட்டரின் பப்பிற்கு வெளியே குமாலோ மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஆனால் அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 27 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள நார்த் பீதர்டன் கிரிக்கெட் கிளப்பில் ஆடிவரும் குமாலோவின் இந்த நிலை குறித்து அந்த கிரிக்கெட் கிளப் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::