பிசிசிஐயிடம் வேண்டுகோள் விடுக்கும் இலங்கை!

Updated: Wed, Jan 26 2022 19:21 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் தொடரானது தற்போது முடிவடைந்து இந்திய அணி நாடு திரும்பியுள்ள வேளையில் அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. 

பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது 20ஆம் தேதி நிறைவு பெறுகிறது. அதன் பின்னர் இலங்கை அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்த தொடருக்காக தாங்கள் இந்தியா வந்து விளையாட வேண்டுமெனில் அதற்கு முன்னர் சில ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் வைத்துள்ளது. அதன்படி இந்திய தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியா செல்லும் இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அந்த டி20 தொடர் முடிவடைந்த பிறகே அவர்கள் இந்தியா வந்து விளையாட இருக்கின்றனர்.

இந்நிலையில் தாங்கள் இந்தியா வந்து இந்த தொடரில் பங்கேற்க வேண்டும் எனில் முதலில் டி20 தொடரை நடத்த வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் டி20 போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள் அங்கிருந்து அதே பயோ பபுளில் இந்தியாவிற்கு வரும் போது பாதுகாப்பு சிரமங்களை குறைக்கவும், போட்டிகளில் விரைவாக கலந்துகொள்ளவும் இந்த ஏற்பாடு செய்ய வேண்டும் என இலங்கை தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்தியா வர இருக்கும் இலங்கை அணி முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய பிறகு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் என அட்டவணை பிசிசிஐ மூலம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த தொடரில் சிரமங்களை குறைக்கும் விதமாகவும் விதமாக முதலில் டி20 தொடரை நடத்திவிட்டு பின்னர் டெஸ்ட் தொடரை நடத்துங்கள் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் தற்போது பிசிசிஐ முழு அட்டவணை தயார் செய்து மைதானங்களையும் தயார் செய்து ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்ட வேளையில் இவர்கள் கேட்டுக் கொள்ளும்படி மீண்டும் அட்டவணையை மாற்ற வாய்ப்பு இருக்கிறதா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பிசிசிஐ இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை