SL vs IND: இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு இவ்வளவு வருவமானமா?

Updated: Thu, Aug 12 2021 16:10 IST
Image Source: Google

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி கடந்த மாதம் இலங்கை சென்று, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 எனவும், டி20 தொடரை இலங்கை 2-1 எனவும் வென்றன. 

இந்திய ஆல்ரவுண்டர் குர்னால்பாண்டியாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு நெருக்கமான தொடா்பில் இருந்ததாக எட்டு வீரா்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். இதனால் கடைசி இரு டி20 ஆட்டங்களில் இந்திய அணியில் புதிய வீரா்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. 

இந்நிலையில் இந்தத் தொடரால் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ. 108 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் மோகன் டி சில்வா கூறுகையில், ‘எஃப்.டி.பி.யின்படி இந்திய அணி 3 ஒருநாள் ஆட்டங்களில்தான் விளையாடவேண்டும். ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவரின் முயற்சியால் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாட பிசிசிஐ சம்மதித்தது. இதனால் இந்தத் தொடரில் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இதர உரிமைகள் மூலமாக 14.5 மில்லியன் டாலர் (ரூ. 108 கோடி) வருமானம் கிடைத்துள்ளது’ என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை