டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியது இலங்கை!

Updated: Tue, Nov 01 2022 12:58 IST
Image Source: Google

எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். தன்படி இன்று நடைபெற்று வரும் முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் மற்றும் உஸ்மான் கானி ஆகியோர் களம் இறங்கினர். முத்ல் விக்கெட்டுக்கு அருமையான தொடக்கம் தந்த இந்த ஜோடி அணியின் ஸ்கோர் 42 ரன்னாக இருந்த போது பிரிந்தது. அந்த அணியில் குர்பாஸ்28 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இதையடுத்து இப்ராகிம் ஜாட்ரான் களம் புகுந்தார். அதிரடியாக ஆடிய இப்ராகிம் ஜாட்ரான் 22 ரன்னுக்கு அவுட் ஆனார்.

இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஆஃப்கானிஸ்தான் அணியினர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தனர். அந்த அணியில் உஸ்மான் கானி 27 ரன்னுக்கும், நஜிபுல்லா ஜாட்ரான் 18 ரன்னுக்கும், குல்பதின் நைப் 12 ரன்னுக்கும், கேப்டன் நபி 13 ரன்னுக்கும் அவுட் ஆகினர்.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களே எடுத்தது. அந்த அணி தரப்பில் குர்பாஸ் 28 ரன்னும், உஸ்மான் கானி 27 ரன்னும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 3 விக்கெட்டும், லஹிரு குமாரா 2 விக்கெட்டும், கசுன் ரஜிதா, டி சில்வா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 10 ரன்களிலும், குசால் மெண்டிஸ் 25 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திருபினர். பின்னர் களமிறங்கிய சரித் அசலங்காவும் 19 ரன்களுடன் நடையைக் கட்டினார். 

ஆனால் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய தனஞ்செய டி சில்வா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்தினார். அவருக்கு துணையாக பனுகா ராஜபக்ஷாவும் அதிரடி காட்டினார். 

இதையடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி சில்வா அரைசதம் கடந்து அணியின் வெற்றியை உறுதிசெய்ய, ரஜபக்ஷா 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் இலங்கை அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பில் நீடிப்பதுடன், ஆஃப்கானிஸ்தான் அணியை டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை