டிசம்பரில் இந்தியா - இலங்கை தொடர் - பிசிசிஐ!

Updated: Thu, Aug 04 2022 22:25 IST
Sri Lanka To Tour India In December (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இரவு நேரம் போட்டி நடப்பதால் யாரும் பார்க்க மாட்டார்கள் என்று கூறி எந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனமும் ஒளிபரப்பு செய்ய முன்வரவில்லை.

மேலும், இந்தியா ஒரே அணிகளுடன் மீண்டும் மீண்டும் தொடர்ந்து மோதுவதால், தற்போது ரசிகர்களிடையே சலிப்பை தந்துள்ளது.

ஏற்கனவே கிரிக்கெட்டில் டாப் 8 அணிகளுக்குள் தான் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானுடன் ஏற்பட்ட அரசியல் பிரச்சினை காரணமாக, கடந்த 10 ஆண்டுகளாக அந்த அணியுடன் இந்திய அணி விளையாட வில்லை. இதை சரி கட்டும் விதமாக இலங்கையும், இந்தியாவும் மாறி மாறி விளையாடுகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தான் இந்திய அணி இலங்கைக்கு சென்று டி20 மற்றும் ஒரு நாள் போட்டியில் விளையாடியது. அதற்குள் அடுத்த 6 மாதத்தில் இலங்கை வந்த இந்திய அணி, 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த இரண்டு தொடரிலுமே இந்தியாவுக்கு பெரும் நெருக்கடி இல்லாமல் சுலபமாக வென்றுவிட்டது.

தற்போது அடுத்த 6 மாதத்தில் மீண்டும் இலங்கை அணி இந்தியாவுக்கு வந்து கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன் படி, வரும் டிசம்பர் மாதம் வரும் இலங்கை அணி, இந்தியாவுடன் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதிலும் பிசிசிஐ டிவிஸ்ட் தான் வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பை முடிந்த நிலையில், அடுத்த 10 மாதங்களில் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதனை கருத்தில் கொண்டு முதலில் 5 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடராக தான் இது நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது பிசிசிஐ, ஒருநாள் போட்டிகளை குறைத்து டி20 போட்டிகளை கூடுதலாக சேர்த்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை