IND vs SL : தொடரை வெல்வது யார்?

Updated: Thu, Jul 29 2021 13:33 IST
Image Source: Google

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3ஆவது டி20 போட்டி இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியை இந்தியாவும், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியை இலங்கையும் வென்றது. இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் கடைசிப் போட்டியை வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - இந்தியா vs இலங்கை
  • இடம்- பிரமதாசா மைதானம், கொழும்பு
  • நேரம் - இரவு 8 மணி

இந்தியா - இலங்கை போட்டி முன்னோட்டம்

ஷிகர் தவான் தலைமையிலனா இந்திய அணி நேற்றையப் போட்டியில் 5 பேட்ஸ்மேன்கள், 6 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது தோல்விக்கான காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. 20 ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் போதுமான ரன்களை குவிக்க தவறியதால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

மேலும் நேற்றையப் போட்டியின் ஆடுகளமும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இல்லை. 132 என்ற வெற்றி இலக்கையே இலங்கை பேட்ஸ்மேன்கள் 7 விக்கெட்டுகளை இழந்த பின்பு கடைசி ஓவரில் எட்ட முடிந்தது. இதனால் இன்றைய போட்டியில் பந்துவீச்சாளர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் இன்று பெரிதாக மாற்றம் ஏதும் இருக்காது என்றே தெரிகிறது. நேற்றையப் போட்டியை பொறுத்தவரை இலங்கை பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாகவே செயல்பட்டது. 

ஆனால் இந்திய அணியைப் பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் புதிய முயற்சிகள் ஏதும் செய்யாமல், நேற்றைய போட்டியில் விடுப்பட்ட வீரர்கள் இந்தப் போட்டியில் களமிறக்கப்படுவார்கள் என்றே தெரிகிறது. அதாவது பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இன்றைய அணியில் இடம்பெறுவார்கள் என்றே தெரிகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய ஆட்டங்கள் - 21
  • இலங்கை வெற்றி - 6
  • இந்தியா வெற்றி - 14
  • முடிவில்லை - 1

உத்தேச அணி

இலங்கை - அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பானுகா, தனஞ்சய டி சில்வா, சதீரா சமரவிக்ரம, தசுன் ஷனகா (கே), ரமேஷ் மெண்டிஸ், வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணாரத்ன, கசுன் ராஜித, அகில தனஞ்சய, துஷ்மந்த சமீரா.

இந்தியா - ஷிகர் தவான் (கே), ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன், நிதீஷ் ராணா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ராகுல் சஹார், அர்ஷ்தீப் சிங் / சாய் கிஷோர், சேதன் சாகரியா

ஃபேண்டஸி லேவன்

  • விக்கெட் கீப்பர்கள் - சஞ்சு சாம்சன், மினோட் பானுகா
  • பேட்ஸ்மேன்கள் - ஷிகர் தவான், தேவ்தத் படிக்கல், அவிஷ்கா ஃபெர்னாண்டோ
  • ஆல்ரவுண்டர்கள் - வாணிந்து ஹசரங்கா, தனஞ்சய டி சில்வா, சாமிகா கருணாரத்ன
  • பந்து வீச்சாளர்கள் - புவனேஷ்வர் குமார், வருண் சக்ரவர்த்தி, ராகுல் சாஹர்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை