ENG vs SL : இலங்கை டி20 கேப்டனாக குசால் பெரேரா நியமன்; 24 பேர் கொண்ட அணி அறிவிப்பு!
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இத்தொடருக்கான 24 பேர் கொண்ட இலங்கை ஒருநாள், டி20 அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை அணியின் டி20 கேப்டனாக குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே இலங்கை ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது டி20 அணியின் கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக இலங்கை டி20 அணியின் கேப்டனாக தசுன் ஷானக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரை கேப்டன் பதவியிலிருந்து இறக்கிய இலங்கை கிரிக்கெட் வாரியம் குசால் பெரேராவை கேப்டனாக அறிவித்துள்ளது.
இங்கிலாந்து-இலங்கை அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூன் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 4ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
இலங்கை அணி: குசல் பெரேரா (கேப்டன்), குசல் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா, பாதும் நிசங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, ஓஷாதா ஃபெர்னாண்டோ, அகிலா தனஞ்சயா, துஷ்மந்தா சமீரா, இசுரு உதனா, பினுரா ஃபெர்னாண்டோ, நுவான் பிரதீப், ஷிரான் ஃபெர்னாண்டோ, கசுன் ராஜிதா, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, நிரோஷன் டிக்வெல்லா, தசுன் ஷானக, சாமிகா கருணாரத்ன, தனஞ்சய லட்சன், வாணிந்து ஹசரங்கா, ரமேஷ் மெண்டிஸ், லக்ஷன் சண்டகன், அசிதா ஃபெர்னாண்டோ, இஷான் ஜெயரத்ன.