சிட்னி டெஸ்டில் சாதனை படைக்க காத்திருக்கும் ஸ்டீவ் ஸ்மித்!

Updated: Thu, Jan 02 2025 12:51 IST
Image Source: Google

இந்தியாவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் நல்ல ஃபார்மில் உள்ளார். இத்தொடரில் அவர் முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஏழு இன்னிங்ஸ்களில் 39.57 என்ற சராசரியில் 277 ரன்களை எடுத்துள்ளார், அதில் அவர் 2 சதங்களையும் அடித்துள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான 5ஆவது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பு சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள்

இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் மேற்கொண்டு 38 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை நிறைவு செய்வார். அவர் இதுவரை 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 202 இன்னிங்ஸ்களில் 56.28 சராசரியில் 9962 ரன்கள் எடுத்துள்ளார்.  அதேசமயம் இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங் (13378 ரன்கள்), ஆலன் பார்டர் (11174 ரன்கள்), ஸ்டீவ் வாக் (10927) ஆகியோர் மட்டுமே 10ஆயிரம் ரன்களை எடுத்துள்ளனர்.

ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு

இதுதவிர்த்து இப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் இந்த மைல் கல்லை எட்டும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதி வேகமாக 10ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது வீரர் எனும் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதற்கு முன் ராகுல் டிராவிட் 206 இன்னிங்ஸில் 10ஆயிரம் ரன்களை எடுத்திருந்தார். இதற்கு முன் முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்காரா ஆகியோர் தலா 195 இன்னிங்களில் இந்த மைல் கல்லை எட்டி முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 196 இன்னிங்ஸில் இந்த மைல் கல்லை எட்டி இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சுனில் கவாஸ்கரை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பு

Also Read: Funding To Save Test Cricket

மேற்கொண்டு இப்போடியில் ஸ்டீவ் ஸ்மித் சதமடிக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் 6ஆம் இடத்தைப் பிடிப்பார். தற்போது வரை அவர் 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 சதங்களை அடித்துள்ளார். இதன்மூலம் அவர் தற்போது 34 சதங்களுடன் பாகிஸ்தானின் யூனிஸ் கான், இந்திய அணியின் சுனில் கவாஸ்கர், விண்டீஸின் பிரையன் லாரா மற்றும்  இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனே ஆகியோருடன் கூட்டாக ஆறாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை