இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட் நியமனம்!

Updated: Wed, Jun 02 2021 15:25 IST
Image Source: Google

 

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பயிற்சியின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் காயமடைந்து பயிற்சியை விட்டு வெளியேறினார். 

இதனால் நாளைய போட்டியில் ஜோ ரூட் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டை துணைக் கேப்டனாக நியமித்துள்ளது. 

இதுவரை இங்கிலாந்து அணிக்காக 146 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 517 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை