ஐபிஎல் 2022: தோனியுடன் பாண்டியாவை ஒப்பிட்ட சுனில் கவாஸ்கர்!

Updated: Mon, May 30 2022 22:01 IST
Sunil Gavaskar's ultimate praise for 'terrific' Hardik Pandya
Image Source: Google

நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று கோப்பையை வென்றது. 

இதில் சிறப்பாக பந்து வீசிய 28 வயதான ஹார்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் பேட்டிங்கிலும் 34 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதன் மூலம் ஆட்ட நாயகன் விருதினையும் வென்றார். 

முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், ஐபிஎல் 2022 தொடரை வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவை தோனியுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.

இந்த வெற்றியினைக் குறித்து பேசிய கவாஸ்கர், “ஹார்திக் பாண்டியாவின் கேப்டன்சியைப் பாருங்கள், அவர் தோனியிடமிருந்து ஏராளமானதைக் கற்றுள்ளார். அவர் தோனியை சகோதரராகவும் ஹீரோவாகவும் பார்க்கிறார். வீரர்களை நிர்வகிக்கும் பாணி தோனியைப் போலவே இருக்கிறது. 

ஆடுகளத்தில் பெரிதாக உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் வீரர்களின் குறைகளை டிரஸிங் ரூமில் தெரியப்படுத்துகிறார். இதனாலயே, ப்ளேயர்கள்  கேப்டனுக்காக எதையாவது சிறப்பாக செய்கின்றனர். ஹார்திக்கின் பவுலிங் மாற்றங்கள் மற்றும் ஃபீல்ட் அமைப்புகள் நன்றாக இருக்கிறது. கேப்டனாக இவரது வெற்றி இந்திய அணிக்கும் ஒருவகையில் நல்லது” என தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை