கரோனா வைரஸ்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.30 கோடி நிதியுதவி!
கரோனா வைரஸின் இரண்டாவது அலை நாடு முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டு, வீரர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கிரிக்கெட் வீரர்களும், ஐபிஎல் அணிகளும் தங்களால் முடிந்த நிதியுதவிகளை செய்து வருகின்றன.
அந்த வகையில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான சன் குழுமன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ரூ.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.
இதுகுறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ சன் டிவி குழுமம் சார்பில் ரூ.30 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியுதவியானது மத்திய, மாநில அரசுகளின் கரோனா தடுப்பு நிவாரணத்திற்காக பயன்படுத்தப்படும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.