ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 15ஆவது சீசனின் 46ஆவது லீக் போட்டியில், இன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
- இடம் - எம்சிஏ மைதானம், புனே
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இனி வரும் 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கும்.
சிஎஸ்கே ஓபனர் ராபின் உத்தப்பா, இந்த சீசனில் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக 79 பந்துகளில் 86 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வேகப்பந்து வீச்சுக்கு பேர்போனது. இதனால், இன்றைய போட்டியில் உத்தப்பாவுக்கு பதிலாக கான்வே களமிறங்க வாய்ப்புள்ளது. ருதுராஜ், ஷிவம் துபே, ராயுடு போன்றவர்கள் இன்று சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
ஜடேஜா கேப்டன் பதவியிலிருந்து விலகியிருப்பதால், இன்று அதிரடி காட்ட வாய்ப்புள்ளது. இலங்கையை சேர்ந்த குட்டி மலிங்கா மதிஷா பதிரனா சிஎஸ்கேவில் இணைந்திருப்பது கூடுதல் பலம். பிரிடோரியஸுக்கு பலதாக இன்று அவர் களமிறங்க வாய்ப்புள்ளது. முகேஷ் சௌத்ரி ஓரளவுக்கு நம்பிகையளிக்க கூடிய வகையில் செயல்பட்டு வருகிறார்.
மகேந்திரசிங் தோனி, புவனேஷ்வர் குமாருக்கு எதிராக 164.91 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவித்திருக்கிறார். இதனால், டெத் ஓவர்களில் இன்று புவனேஷ்வர் குமாரை வெளுத்துக்கட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சன் ரைசர்ஸ் அணி 8 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ளது. அந்த அணியின் பலம் என்றால் பந்துவீச்சுதான். நடராஜன், உம்ரான் மாலிக், யான்சன் போன்றவர்கள் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா தொடர்ச்சியாக ரன்களை சேர்த்து வருகிறார். ஐடன் மார்க்கரம், பூரன் இன்று அதிரடி காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 17
- சிஎஸ்கே வெற்றி - 12
- எஸ் ஆர் எச் வெற்றி - 5
உத்தேச அணி
சிஎஸ்கே: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா / டேவன் கான்வே, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மகேந்திரசிங் தோனி, டுவைன் பிரிடோரியஸ் / ராஜ்வர்தன், டுவைன் பிராவோ, முகேஷ் சௌத்ரி, மகீஷ் தீக்ஷனா.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: கேன் வில்லியம்சன், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்கரம், நிகோலஸ் பூரன், ஷாஷங் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், மார்கோ யான்சன், உம்ரான் மாலிக்.
ஃபேண்டஸி லெவன்
- கீப்பர் - நிக்கோலஸ் பூரன்
- பேட்ஸ்மேன்கள் - கேன் வில்லியம்சன், ராகுல் திரிபாதி, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா
- ஆல்-ரவுண்டர்கள் - ஐடன் மார்க்ரம், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர்
- பந்துவீச்சாளர்கள் - உம்ரான் மாலிக், டி நடராஜன், டுவைன் பிராவோ