ஐபிஎல் திருவிழா 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று ப்ராபோர்ன் மைதானத்தில் நடக்கும் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் -சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- இடம் - ப்ராபோர்ன் மைதானம், மும்பை
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணி தொடர்ச்சியான தோல்விகளுக்கு பிறகு ஒருவழியாக வெற்றிப்பாதைக்கு சமீபத்தில் தான் திரும்பியது. ராஜஸ்தான், லக்னோ அணிகளுக்கு எதிராக படுதோல்வியை தழுவிய அந்த அணி, சென்னை அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றது. அதே வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் குஜராத் டைட்டன்ஸையும் வீழ்த்தி அசத்தியது.
பார்முக்கு வராமல் இருந்த அபிஷேக் ஷர்மாவும் கேன் வில்லியன்சனும் சிறப்பாக விளையாடி வருவது அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது. ஐடன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரான் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார்கள்.
உம்ரான் மாலிக், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பவுலிங்கில் சிறப்பான நிலையில் உள்ளனர். புவனேஷ்வர் குமாரும் சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் கேகேஆர் லைன் அப்பிற்கு கடும் போட்டியை அளிக்க இயலும்.
அதேசமயம் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 வெற்றி, இரு தோல்வி என 6 புள்ளிகளுடன் பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி நல்ல ஃபார்மில் இருந்தாலும் கடந்த முறை பேட்டிங்கில் தடுமாறியதை மறுக்க முடியாது. ஒரு ஆட்டத்தில் ஆண்ட்ரோ ரஸலும் மற்றொரு ஆட்டத்தில் பேட் கம்மின்ஸும் தான் காப்பாற்றினர்.
எனவே கொல்கத்தா பேட்ஸ்மேன்களில் ஒரு சிலர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். மும்பைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ் 14 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்தார். தொடக்க வீரராக களமிறங்கும் ரஹேனாவும் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். இதனால் பாபா இந்தரஜித், ஆரோன் பிஞ்ச் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 21
- கொல்கத்தா வெற்றி - 14
- ஹைதராபாத் வெற்றி - 7
உத்தேச அணி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஜிங்கியா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கே), சாம் பில்லிங்ஸ், நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், உமேஷ் யாதவ், ரசிக் சலாம், வருண் சக்கரவர்த்தி.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கே), ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன் , ஐடன் மார்க்ரம், ஷஷாங்க் சிங், ஜே சுசித்/ ஸ்ரேயாஸ் கோபால், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன்
- பேட்டர்ஸ் - கேன் வில்லியம்சன், ராகுல் திரிபாதி, ஸ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா
- ஆல்-ரவுண்டர்கள் - அபிஷேக் சர்மா, ஆண்ட்ரே ரஸ்ஸல்
- பந்துவீச்சாளர்கள் - டி நடராஜன், சுனில் நரைன், உமேஷ் யாதவ், பாட் கம்மின்ஸ்.