ஐபிஎல் 2021: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Oct 07 2021 15:13 IST
Cricketnmore

ஐபிஎல் 14ஆவது சீசனின் லீக் ஆட்டங்கள் நாளையும் முடிவடையவுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே நாளைய தினம் முதல் முறையாக இரண்டு போட்டிகளும் ஒரே சமயத்தில் நடைபெறவுள்ளன. 

அதன்படி நாளை இரவு நடைபெறும் 55ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ்
  • இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம் 

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நாளைய போட்டியில் வெற்றிப்பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழலில் விளையாடவுள்ளது. 

நடப்பு சீசனில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 6 வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலின் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இதனால் நாளைய போட்டியில் கட்டாயம் ஹைதராபாத்தை வீழ்த்த வேண்டிய சூழலில் மும்பை அணி உள்ளது. 

அதேசமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு சீசன் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தாலும், சீசனின் முடிவை வெற்றியுடன் முடிக்க விருப்படுகிறது. நேற்று நடைபெற்ற ஆர்சிபி அணிக்கெதிரான போட்டியிலும் கூட ஹைதராபாத் அணி கடைசி ஓவரில் வெற்றியைப் பெற்று அசத்தியிருந்தது. 

இதனால் நாளைய போட்டியிலும் ஹைதராபாத் அணி வெற்றிபெற்று சீசனை வெற்றியுடன் முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 17
  • மும்பை வெற்றி - 9
  • ஹைதராபாத் வெற்றி - 8

உத்தேச அணி 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ஜேசன் ராய், விருத்திமான் சாஹா/ ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, கேன் வில்லியம்சன் (கே), ப்ரியம் கார்க், அப்துல் சமத், அபிஷேக் சர்மா, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல், உம்ரான் மாலிக்.

மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, ஜேம்ஸ் நீஷம், நாதன் கூல்டர் -நைல், ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷன்
  • பேட்டர்ஸ் - சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, கேன் வில்லியம்சன், ஜேசன் ராய்
  • ஆல் -ரவுண்டர்கள் - கீரான் பொல்லார்ட், ஜேசன் ஹோல்டர்
  • பந்துவீச்சாளர்கள் - நாதன் கூல்டர் -நைல், ஜஸ்பிரித் பும்ரா, உம்ரான் மாலிக், ரஷித் கான்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை