தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தை சரமாறியாக சாடும் அஃப்ரிடி!

Updated: Thu, Apr 08 2021 12:53 IST
Surprised SA allowed players to leave for IPL during series: Afridi (Image Source: Google)

பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியது. 

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான டி காக், மில்லர், ரபாடா, நோர்ட்ஜே ஆகியோர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக, பாகிஸ்தான் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினர். இதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் அனுமதி வழங்கியது. 

இதையடுத்து, சொந்த நாட்டு தொடரை விட்டு ஐபிஎல் தொடருக்கு வீரர்கள் செல்ல அனுமதி வழங்கிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அஃப்ரிடி, “பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் தென்ஆப்பிரிக்க அணி விளையாடிவரும் வேளையில், ஐபிஎல் தொடருக்கு அணியின் முக்கிய வீரர்கள் செல்ல தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியிருப்பது ஆச்சரியமாக உள்ளது. சர்வதேச போட்டிகளை விட டி20 தொடர்கள் அவ்வளவு முக்கியமானதா?” என்று பதிவிட்டுள்ளார்.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை