நடராஜன் விளையாடியிருந்தாலும் பெரிதாக மாற்றம் இருந்திருக்காது - ட்ரெவர் பேலிஸ்!

Updated: Thu, Sep 23 2021 13:32 IST
T Natarajan's positive COVID-19 test did not impact game, says Trevor Bayliss (Image Source: Google)

நேற்றைய நடைபெற்ற 33ஆவது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. அதன்பின் விளையாடிய டெல்லி அணி 17.5 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த வெற்றியினால் முதல் இடத்துக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் மீண்டும் முன்னேறியுள்ளது. அதேசமயம் ஹைதராபாத் அணி தொடர்ந்து கடைசி இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் தோல்வி பற்றி சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ் கூறுகையில், “நடராஜன் விளையாடியிருந்தால் ஆட்டத்தின் முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என நான் நினைக்கவில்லை. டெல்லி அணி மிகச்சிறப்பாக விளையாடினார்கள். நடராஜன் விளையாடாததால் சிறிது வருத்தம் ஏற்பட்டது. 

ஆனால் அணி வீரர்களும் அனைவரும் தொழில்முறையில் விளையாடுபவர்கள். ஆட்டம் தொடங்கும் முன்பு காயம் ஏற்பட்டால் வீரரை நீங்கள் மாற்ற வேண்டியிருக்கும். எனவே இந்த மாற்றம் வீரர்களுக்குப் பழகியிருக்கும்” என்று தெரிவித்தார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நடராஜனுடன் தொடர்பில் இருந்த சக வீரர் விஜய் சங்கர், விஜய் குமார் (அணி மேலாளர்), ஷ்யாம் சுந்தர் (பிசியோதெரபிஸ்ட்), அஞ்சனா வன்னா (மருத்துவர்), துஷார் கேத்கர் (லாஜிஸ்டிக்ஸ் மேலாளர்), வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர் பி. கணேசன் ஆகியோரும் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை