டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி முகமது நைம், முஷ்பிக்கூர் ரஹீம் ஆகியோரது அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக முகமது நைம் 62 ரன்களையும், முஷ்பிக்கூர் ரஹீம் 57 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் கருணரத்ன, ஃபெர்னாண்டோ, லஹிரு குமாரா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை துரத்திய இலங்கை அணியில் குசால் பெரேரா, பதும் நிஷங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, வாநிந்து ஹசரங்கா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த சரித் அசலங்கா - பானுகா ராஜபக்ஷ இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். மேலும் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். 

இதன்மூலம் 18.5 ஓவர்களிலேயே இலங்கை அணி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News