நான் பந்தை ஸ்விங் செய்ய அதிக பயிற்சி எடுத்துக்கொண்டேன் - ஷாஹின் அஃப்ரிடி!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 152 ரன்களை இலகக்காக நிர்ணயித்துள்ளது.
அதிலும் இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஷாஹின் அஃப்ரிடி இந்திய அணியின் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில் இன்னிங்ஸ் முடிவில் பேசிய அஃப்ரிடி, “அணியின் திட்டத்தை செயல்படுத்தியதில் மிகுந்த மகிழ்ச்சி. அதன்படி போட்டியின் ஆரம்பத்திலும், இன்னிங்ஸின் முடிவிலும் விக்கெட்டுகளை கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது.
மேலும் நேற்றைய பயிற்சியில் நான் பந்தை ஸ்விங் செய்வதில் அதிக நேரம் செலவிட்டேன். ஏனெனில் ஸ்விங் இல்லை என்றால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க சுலபமாகிவிடும். அதேசமயம் நான் விக்கெட்டுகளை கைப்பற்ற ரன்களைக் கொடுப்பதற்கு கவலைப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஷாஹின் அஃப்ரிடி 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.