டி20 உலகக்கோப்பை: விண்டீஸை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா!

Updated: Tue, Oct 26 2021 19:05 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி எவின் லூயிஸ், கீரன் பொல்லார்ட் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தினால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக எவின் லூயிஸ் 56 ரன்களையும், பொல்லார்ட் 26 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டுகளையும், கேசவ் மஹாராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பவுமா 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ரீசா ஹெண்ட்ரிக்ஸ் - வென்டர் டூசென் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் ஹென்ரிக்ஸ் 39 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஐடன் மார்க்ரம் அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்தார். அதன் மூலம் 35 பந்துகளில் அரைசதம் கடந்தும் அசத்தினார். 

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

இதன் மூலம் 18.2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை