டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 2ஆவது தகுதிச்சுற்றுப் போட்டியில் வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கும் ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் நட்சத்திர வீரர்கள் கைல் கொட்சர், மேத்யூ கிராஸ், ஜார்ஜ் முன்சே, ரிச்சி பெர்ரிங்டன் என அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த கிறிஸ் கிரீவ்ஸ் - மார்க் வாட் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பின் மார்க் வாட் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கிரீவ்ஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் மெஹதி ஹசன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News