டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் குசால் பெரேரா, தினேஷ் சண்டிமல், அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த பதும் நிஷங்கா - வாநிந்து ஹசரங்கா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் இருவரும் அரைசதம் கடந்தனர்.
அதன்பின் 71 ரன்களில் ஹசரங்கா ஆட்டமிழக்க, அடுத்து வந்த ராஜபக்க்ஷ ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ 71 ரன்களையும், பதும் நிஷங்கா 61 ரன்களையும் சேர்த்தனர். அயர்லாந்து தரப்பில் ஜோஷுவா லிட்டில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.