பவுண்டரி எல்லையில் அக்ஸர் படேல் பிடித்த அபாரமான கேட்ச் - வைரலாகும் காணொளி!

Updated: Mon, Jun 24 2024 23:22 IST
Image Source: Google

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டம் இன்று செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 92 ரன்களைச் சேர்த்தார். 

மேற்கொண்டு சூர்யகுமார் யாதவ் 31 ரன்களையும், ஷிவம் தூபே 28 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 27 ரன்களையும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் டேவிட் வார்னர் 6 ரன்களை மட்டுமே எடுத்து முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் இணைந்த டிராவிஸ் ஹெட் மற்றும் கேப்டன் மிட்செல் மார்ஷ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து அபாரமானா ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தர். 

அதன்படி இன்னிங்ஸின் 9ஆவது ஓவரை குல்தீப் யாதவ் வீச, அந்த ஓவரின் கடைசி பந்தை மிட்செல் மார்ஷ் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் ஸ்வீப் ஷாட்டை அடித்தார். ஆனால் பந்து அவர் நினைத்தபடி உயரமாக செல்லாத காரணத்தால், அத்திசையில் இருந்த அக்ஸர் படேல் பவுண்டரி எல்லையில் நின்று அபாரமாக தாவி பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார். இந்நிலையில் அக்ஸர் படேல் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இப்போட்டியில் 205 ரன்கள் என்ற இலக்கை துரத்தி வரும் ஆஸ்திரேலிய அணி தற்போது வரை 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டிராவிஸ் ஹெட் 73 ரன்களை விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இதனால் கடைசி 5 ஓவர்களில் 65 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை