டி20 உலகக்கோப்பை: 4 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது நமீபியா!
அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரின் 21ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - நமீபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியாது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களைச் சேர்த்ததில். நமீபியா அணி தரப்பில் ரூபன் டிரம்பெல்மேன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய நமீபியா அணிக்கு கிரேக் வில்லியம்ஸ் - மைக்கேல் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில்க் மைக்கேல் 18 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஸான் கிரீன், எராஸ்மஸ் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் 23 ரன்களை எடுத்திருந்த கிரேக் வில்லியம்ஸும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய டேவிட் வைஸ் - ஜேஜே ஸ்மித் இணை அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
இதன்மூலம் 19.1 ஓவர்களிலேயே நமீபியா அணி இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது.