டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவிற்கு 155 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 22ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை - ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த குசால் பெரேரா - சரித் அசலங்கா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
பின்னர் 35 ரன்கள் எடுத்திருந்த இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ, வாநிந்து ஹசரங்கா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இறுதியில் பனுகா ராஜபக்க்ஷா - தசுன் ஷானகா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களைச் சேர்த்தது.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பனுகா ராஜபக்ஷ 33 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.