டி20 உலகக்கோப்பை: மீண்டும் சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 23ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெயில், எவின் லூயிஸ் இணை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து வந்த ஷிம்ரான் ஹெட்மையர், ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுக்ளையும் இழந்து பெவிலியன் திரும்பினார்.
இதில் 16 பந்துகளில் 8 ரன்களை அடித்திருந்த கேப்டன் கீரன் பொல்லார்ட் ரிட்டையர் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ரோஸ்டன் சேஸ் - நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அதன்பின் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் 40 ரன்கைளில் ஆட்டமிழந்து வாய்ப்பை நழுவவிட்டார்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
அவரைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஸ்டன் சேஸும் 39 ரன்களுக்கு நடையைக் கட்டினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே சேர்த்தது.