டி20 உலகக்கோப்பை: மில்லர் சிக்சரில் தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!

Updated: Sat, Oct 30 2021 19:08 IST
T20 WC 25th Match: South Africa beat Sri Lanka by 4 wickets
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய இலங்கை அணி, பதும் நிஷங்காவின் அரைசதத்தினால் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக பதும் நிஷங்கா 72 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் பிரிட்டோரியஸ், தப்ரைச் ஷம்ஸி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் டி காக், ஹெண்ட்ரிக்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து சமீரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். 

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வென் டெர் டூசெனும் 16 ரன்களில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் பவுமா - ஐடன் மார்க்ரம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதி. 

இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டெம்பா பவுமா 46 ரன்களில் ஆட்டமிழக்க, ஐடம் மார்க்ரம், பிரிட்டோரியஸ் ஆகியோரும் ஹசரங்கா பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதன்மூலம் வநிந்து ஹசரங்கா ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் எடுக்கப்பட்ட முதல் ஹாட்ரிக் விக்கெட்டாகவும் இது அமைந்தது. 

இதனால் கடைசி 2 ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற 25 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இறுதியில் மில்லர் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை