டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து!

Updated: Sun, Nov 07 2021 18:33 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 40ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி நஜிபுல்லா சத்ரானின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சத்ரான் 73 ரன்களைச் சேர்த்தார். நியூசிலாந்து அணி தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்தில் - டெரில் மிட்செல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் கப்தில் 28 ரன்னிலும், மிட்செல் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் - டேவன் கான்வே இணை சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இதன் மூலம் 18.1 ஓவர்களில் நியூசிலாந்து அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. 

Also Read: T20 World Cup 2021

இதன் மூலம் நியூசிலாந்து அணி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனால் இந்திய அணிக்கான அரையிறுதி வாய்ப்பானது கைநழுவிபோனது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை