இன்றைய போட்டியின் ஃபிட்ச் மிகவும் மெதுவாக இருந்தது - இஷ் சோதி!

Updated: Sun, Oct 31 2021 21:46 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரின் 28ஆவது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி விளையாடிய இந்திய அணி, நியூசிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இப்போட்டியில் நியூசிலாந்து அணி தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், இஷ் சோது 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய பேட்டிங்கை நிர்மூலப்படுத்தினர். 

இந்நிலையில் இன்னின்ங்ஸ் முடிந்து பேசிய இஷ் சோதி, “நாங்கள் பார்த்ததை விட பிட்ச் மிகவும் மெதுவாக இருந்தது. கொஞ்சம் புல்வெளியாக இருந்தாலும் எதிர்பார்த்ததை விட பந்து மெதுவாக சென்றது. அதனால் நாங்கள் முதலில் பந்துவீச முடிவு செய்தோம். 

Also Read: T20 World Cup 2021

நாங்கள் மிகவும் மெதுவாக பந்துவீசும் போது எதில் எந்த ஒரு பிரச்சனையும் வரவில்லை. ஆனால் போட்டி தொடங்கும் முன் நாங்களை இந்தியாவை 120 ரன்னில் இந்தியாவை வீழ்த்தியிருப்போம் என்று சொல்லிருந்தால் நம்மியிருக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை