டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக வங்கதேச வீரர் தொடரிலிருந்து விலகல்!

Updated: Wed, Oct 27 2021 13:11 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரின் ஏழாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இந்நிலையில் வங்கதேச அணியின் ஆல் ரவுண்டர் முகமது சைஃபுதின் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனை வங்கதேச கிரிக்கெட் வாரியமும் உறுதிசெய்துள்ளது. 

மேலும் முகமது சைஃபுதின் விலகியதையடுத்து அவருக்கு மாற்று வீரராக ரூபெல் உசைன் வங்கதேச அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

முன்னதாக ரூபெல் உசைன் டி20 உலகக்கோப்பைக்கான வங்கதேச அணியின் ரிசர்வ் வீரராக அணியில் சேர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை