டி20 உலகக்கோப்பை அரையிறுதி: மிட்செல், கான்வே, நீஷம் அதிரடி; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!

Updated: Wed, Nov 10 2021 23:06 IST
T20 WC Semi Final: New Zealand storm into their first-ever T20 World Cup final (Image Source: Google)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து ஆணிகாள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி மொயின் அலி - டேவிட் மாலனின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக மொயீன் அலி 51 ரன்களையும், டேவிட் மாலன் 42 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே பேரிடியாக மார்டின் கப்தில், கேன் வில்லியம்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த டெரில் மிட்செல் - டேவன் கான்வே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பந்த கான்வே 46 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதன்பின் களமிறங்கிய கிளென் பிலீப்ஸ் 2 ரன்னில் நடையைக் கட்ட, அடுத்து வந்த ஜேம்ஸ் நீஷம் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியின் அருகே கொண்டு சென்றார். இதற்கிடையில் டெரில் மிட்செல் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். 

பின் 27 ரன்கள் எடுத்திருந்த நீஷம், ஆதில் ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் சற்றும் தளைக்காத டெரில் மெட்செல் பவுண்டரிகளைப் பறக்க வீட்டு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். 

Also Read: T20 World Cup 2021

இதன்மூலம் நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி முதல் முறையாக டி2 0 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை