விண்டீஸை குறைத்து மதிப்பிடக்கூடாது - காகிசோ ரபாடா

Updated: Tue, Oct 26 2021 13:21 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள 18ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் இரு அணிகளும் விளையாடிய முதல் போட்டியில் படுதோல்விகளைச் சந்தித்துள்ளதால், இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியை குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர்கள் அபாயமானவர்கள் என்று தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ரபாடா, “இது ஒரு விளையாட்டு மட்டுமே, கடந்த போட்டியில் எங்களால் அதை வெற்றிபெற முடியவில்லை. ஆனாலும் நாங்கள் மீண்டு வருவோம். அதனால் இன்றைய போட்டியில் நிச்சயம் அதனை செய்வோம்.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

வெஸ்ட் இண்டீஸ் ஒரு ஆபத்தான அணி. யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. இன்று ஒரு புதிய நாள். எங்கள் முதல் போட்டியில் இருந்ததைப் போலவே, சிறப்பாக செயல்பட விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை