டி20 உலகக்கோப்பை 2022: நமீபியாவை வீழ்த்தி நெதர்லாந்து த்ரில் வெற்றி!

Updated: Tue, Oct 18 2022 12:53 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவாது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்காக தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் 5ஆவது போட்டியில் நெதர்லாந்து - நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக மைகேல் வான் லின்கன் மற்றூம் திவான் லே காக் ஆகியோர் களம் இறங்கினர். இதில் திவான் ஆட்டத்தின் 2ஆவது ஓவரில் டக் அவுட் ஆனார்.

இதையடுத்து ஸ்டீபன் பார்ட் களம் புகுந்தார். இந்நிலையில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மைக்கேல் 20 ரன்னுக்கும், அடுத்து களம் இறங்கிய ஜான் நிகொல் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஸ்டீபன் பார்ட்டுடன் ஜான் ஃப்ரைலிங்க் ஜோடி சேர்ந்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த இந்த ஜோடி அணியின் ஸ்கோர் 63 ரன்னாக உயர்ந்த போது பிரிந்தது. ஸ்டீபன் பார்ட் 19 ரன்னுக்கு அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய எராஸ்மஸ் 11 ரன்னுக்கு அவுட் ஆனார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் அடித்தது. அந்த அணி தரப்பில் பிரைலின்க் 43 ரன்கள் குவித்து அவுட் ஆனார். நெர்தர்லாந்து அணி தரப்பில் லீடீ 2 விக்கெட்டும், டிம் பிரிங்கிள், காலின், பால் வான் மீக்கிரென், வான் டெர் மெர்வ் ஆகியோர் தலா 1 விக்கெ வீழ்த்தினர். 

அதன்பின் 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓடவுட் - விக்ரம்ஜித் சிங் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 39 ரன்களில் விக்ரஜித் சிங்கும், 35 ரன்களில் மேக்ஸ் ஓடவுட்டும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய பாஸ் லீட் ஓரளவு தாக்குப்பிடிக்க, மறுமுனையில் களமிறங்கிய டாம் கூப்பர், காலின் அக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆகியோர் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.

இருப்பினும் கடைசி வரை களத்தில் இருந்த பாஸ் டி லீட் 30 ரன்களைச் சேர்த்து, அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் 19.3 ஓவர்களில் நெதர்லாந்து அணி இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கான இடத்தை ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை