டி20 உலகக்கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!

Updated: Mon, Oct 18 2021 23:18 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசியது. 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்க வீரர்கள் மற்றும் ஜிம்மி நீஷமின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 37 ரன்களையும், ஜிம்மி நீஷம் 31 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் 24 ரன்களில் ஆரோன் ஃபிஞ்ச், மிட்செல் மார்ஷ் ஆகியோர் வெளியேறினார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - மார்கஸ் ஸ்டோய்னிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் ஸ்மித் 35 ரன்களையும், ஸ்டோய்னிஸ் 28 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அதன்பின் இறுதியில் ஆஷ்டன் அகர் அபாரமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் 19.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டி, 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை