டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகான நடுவர்களை அறிவித்தது ஐசிசி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஒன்பதாவது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்திய அணியை எதிர்த்து தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. முன்னதாக இத்தொடரின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் முன்னேறி இருந்தன.
இதில் முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோதின. இதில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானையும், இந்திய அணி 24 ரன்களில் இங்கிலாந்து அணியையும் வீழ்த்தி இந்த இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளன.
மேலும் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் தோல்வியையே சந்திக்காமல் இறுதிப்போட்டிவரை முன்னேறியுள்ளன. அதிலும் குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாகவும், இந்திய அணி 10 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள காரணத்தால் இதில் எந்த அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இப்போட்டிக்கக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன. இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கான போட்டி நடுவர்களை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி கள நடுவர்களாக கிறிஸ்டோபர் கஃபேனி, ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோரும், மூன்றாம் நடுவராக ரிச்சர்ட் கெட்டில்பர்க்கும், நான்காம் நடுவராக ரோட்னி டக்கரும் போட்டி நடுவராக ரிச்சி ரிச்சர்ட்சனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.