ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை தொடர் - ஜெய் ஷா

Updated: Mon, Jun 28 2021 16:29 IST
T20 World Cup To Be Held In UAE, Confirms Jay Shah (Image Source: Google)

இந்தியாவில் நிலவும் கரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டவுள்ளது. 

இந்நிலையில், இந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா பரவலில் தாக்கம் குறையாததால், இத்தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இத்தகவலை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று உறுதி செய்துள்ளார். அதன் படி கரோனா பரவலை கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் 2021 டி20 உலக கோப்பை தொடர் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இன்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இந்த தொடரை எப்போது நடத்துவது என்ற முடிவை ஐசிசி எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். உத்தேசமாக அக்டோபர் முதல் நவம்பருக்குள் உலக கோப்பை தொடர் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் 2021 சீசனில் விடுபட்டுள்ள போட்டிகளையும் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

உலக கோப்பை தொடரை அமீரகத்தில் நடைபெற்றாலும் இந்த தொடரை ஹோஸ்ட் செய்வது இந்தியாதான் என ஐசிசி முன்னதாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதனால் இந்திய கிரிக்கெட் அணி தொடரை நடத்தும் அணியாக களம் இறங்குகிறது.     

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை