தனக்கு பிறகு ஸ்மித்திற்கு கேப்டன்சி கிடைக்க வேண்டும் - டிம் பெய்ன்

Updated: Thu, May 13 2021 12:35 IST
'Tactically he is as good as you get': Paine backs Steve Smith for Test captaincy
Image Source: Google

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன். இவர் இந்த ஆண்டு ஆஷஸ் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது ஓய்வுக்கு பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக மீண்டும் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய பெய்ன், “எனக்கு பிறகு ஸ்மித் கேப்டான அணியை வழிநடத்துவார் என நினைக்கிறேன். வெளிப்படையாக நான் அந்த முடிவை எடுக்க வில்லை, ஆனால் நான் ஸ்டீவ் ஸ்மித்தின் தலைமையின் கீழ் விளையாடி உள்ளேன். அவரது கேப்டன்சி மிகவும் சிறப்பானது.  

மேலும் அவரது கேப்டன்சியின் கீழ் ஆஸ்திரேலிய அணி மிகச் சிறப்பான வெற்றிகளை பெற்றுள்ளது. அவர் ஆட்டத்தின் போக்கை உணர்ந்து விளையாடும் திறன் கொண்டவர். அதனால் தான் எனக்கு பிறகு ஸ்மித்திற்கு மீண்டும் கேப்டன்சி வழங்கப்பட வேண்டும்” என கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை