அன்னையர் தினம்: வாழ்த்துக்களை பகிர்ந்த ஜாம்பவான்கள்!

Updated: Sun, May 09 2021 14:43 IST
Tendulkar, Raina lead as cricketers extend Mother's Day greetings
Image Source: Google

உலகம் முழுவதும் இன்று (மே 9) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விளையாட்டு பிரபலங்கள், ஐபிஎல் அணிகள் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நீங்கள் எவ்வளவு வயதானாலும் உங்களுக்காக பிராத்திப்பார்கள் தாய்மார்கள். அவர்களைப் பொறுத்தவரை, நீங்கள் எப்போதும் அவர்களின் குழந்தை. என்னை எப்போதும் வளர்த்து, நேசித்த இரண்டு தாய்மார்கள் என் வாழ்க்கையில் கிடைத்திருப்பது பாக்கியம். எனது பாட்டி மற்றும் அம்மாவிற்கு எனது மகிழ்ச்சியான அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா தனது பதிவில், என்னுடைய வலிமைக்கு காரணமான மற்றும் தன்னை சிறப்பாக வழி நடத்தி வரும் தன்னுடைய அன்னைக்கு அன்னையர் தினத்தையொட்டி வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். மேலும் தன்னுடைய அன்னை தனக்கு எப்போதும் மிகப்பெரிய உத்வேகமாக இருந்து வருவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர்  சிறப்பான அன்னையாக திகழும் தன்னுடைய மனைவி கேன்டீசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எவ்வளவு சிறப்பான தாய் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நமது முதல் மற்றும் சிறப்பான சூப்பர் ஹீரோ நமது தாய் என்று குறிப்பிட்டுள்ளது. ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியும் தனது அன்னையர் தின வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை