வார்னே மறைவில் சந்தேகம்; நண்பர்களை சந்தேகிக்கும் காவல்துறை!

Updated: Sat, Mar 05 2022 13:13 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே நேற்று தாய்லாந்தில் உயிரிழந்தார். மாரடைப்பால் திடீரென உயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட போதும், அவரின் மரணத்தில் மர்மங்கள் சூழ்ந்துள்ளன.

ஷேன் வார்னே மற்றும் அவரது 3 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து தான் தாய்லாந்திற்கு சுற்றுலா போன்று சென்றுள்ளனர். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த போது, வார்னே இரவு உணவிற்கு வராததால் அவருக்கு என்ன ஆயிற்று என்று மற்ற நண்பர்கள் பார்க்க சென்றுள்ளனர். ஆனால் அங்கு எந்தவித உணர்ச்சிகளும் இன்றி வார்னே கிடந்துள்ளார்.

இதனையடுத்து வார்னேவுக்கு நண்பர் ஒருவர் சிபிஆர் முதலுதவி செய்து பார்த்ததாகவும், அது பலனளிக்காததால்,ஆம்புலன்ஸை அழைத்ததாகவும் காவல்துறையிடம் அந்த 3 நண்பர்களும் தெரிவித்திருந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் வந்த பிறகு 20 நிமிடங்கள் வரை சிபிஆர் செய்த பார்த்த பிறகே அவர் உயிர் பிரிந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வெளியான அடாப்சி ரிப்போர்ட்டிலும் ஷேன் வார்னே மாரடைப்பால் உயிரிழந்தார் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர். ஆனால் இந்த மரணத்தில் காவல்துறைக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை. குறிப்பாக வார்னேவின் 3 நண்பர்கள் கூறிய விளக்கங்களில் நம்பிக்கை இல்லை என்பது போன்று காவல்துறை இருப்பதாக தெரிகிறது.

இதனையடுத்து மருத்துவ அறிக்கைகளை கணக்கில் எடுக்காமல் இன்று அந்த 3 பேரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்போவதாக தாய்லாந்து காவல் துறை அறிவித்துள்ளது. அவர்களிடம் குறுக்குவிசாரணை நடத்த மூத்த அதிகாரிகளும் வரவழைக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே வார்னேவின் மரணத்தில் பல மர்மங்கள் இன்று உடைபடலாம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை