IND vs SA: இஷான் கிஷானை புகழ்ந்த கவுதம் கம்பீர்!

Updated: Fri, Jun 10 2022 23:00 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் ரூ.15.25 கோடிகளை கொட்டி கொடுத்து இஷான் கிஷனை ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் இஷான் கிஷன் ஐபிஎல்லில் சரியாக ஆடவில்லை. அவர் ஒரு போட்டியில் கூட சிறப்பாக ஆடவில்லை. 

ஆனாலும் கோர் வீரர்களில் ஒருவரான இஷான் கிஷன் மீது நம்பிக்கை வைத்து அவரை அனைத்து போட்டிகளிலும் இறக்கிவிட்டது மும்பை அணி. அவர் சரியாக ஆடாததுடன், மும்பை அணியும் மோசமாக சொதப்பி லீக் சுற்றுடன் வெளியேறியது. 

அனைத்து லீக் போட்டிகளிலும் ஆடி ஒரு போட்டியில் கூட சரியாக ஆடாத இஷான் கிஷன், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி 48 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 76 ரன்களை குவித்தார். இஷான் கிஷனின் பேட்டிங் பார்க்க அருமையாக இருந்தது. 

குறிப்பாக ஸ்பின்னர் கேஷவ் மஹராஜின் ஒரு ஓவரை அவர் ஆடிய விதம் அபரிமிதமானது. அந்த ஒரு ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசினார். ஒட்டுமொத்தமாக அந்த இன்னிங்ஸில் அவரது பேட்டிங் அபாரமாக இருந்தது. 

இஷான் கிஷனின் பேட்டிங்கை ரசித்த கம்பீர், “அவரைப்பற்றி பெருமையாக பேசியுள்ளார். இஷான் கிஷன் குறித்து பேசிய கம்பீர், அபாயகரமான பேட்ஸ்மேன் இஷான் கிஷன். அதனால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுத்தது. 

ஒரு ஓவரில் மற்ற வீரர்கள் 20 ரன்கள் அடித்திருந்தால் சிங்கிள் எடுத்துவிட்டு அடுத்த ஓவரில் சான்ஸ் எடுத்துக்கொள்ளலாம் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் ஒரு ஓவரில் 20 ரன்கள் அடித்தபின்பும், அதை 26ஆக மாற்ற நினைத்தார் இஷான் கிஷன். அதுதான் அவரிடம் நான் பார்க்கும் நல்ல விஷயம். அதுதான் டி20 கிரிக்கெட்டுக்கும் தேவை” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை